அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த
வாகனங்கள் பறிமுதல்
இராமநாதபுரம்:
இராமநாதபுரத்தில் அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதன்படி இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் பாரதி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 ஆம்னி கார் மற்றும் ஒரு வேன் ஆகியவற்றை மடக்கி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல ரோமன்சர்ச் பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது சூரங்கோட்டை பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் சூரங்கோட்டையை சேர்ந்த குப்பு என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக லாரி உரிமையாளர் கருணாநிதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி மேல் நட வடிக்கைக்காக இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.













0 comments