5 November 2013

காங்கிரஸ் எம்.பி. மீது சில்மிஷ புகார் வாபஸ் பெற்றார் நடிகை ஸ்வேதா மேனன்

காங்கிரஸ் எம்.பி. மீது சில்மிஷ புகார் வாபஸ் பெற்றார் 
நடிகை ஸ்வேதா மேனன்




திருவனந்தபுரம்: 

         காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்புக்கு எதிரான சில்மிஷ புகாரை நடிகை ஸ்வேதாமேனன் வாபஸ் பெற்றார். இதற்கு அக்கட்சியினரின் மிரட்டல் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என கூறியுள்ள நிலையில் இந்த பிரச்சனையில் அடுத்த பரபரப்பு தொற்றி கொண்டது.மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்வேதாமேனன். இவர் கடந்த 1ம் தேதி கொல்லத்தில் நடந்த படகு போட்டியை தொடங்கி வைக்க வந்திருந்தார். 

இந்நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் எம்.பி. பீதாம்பரகுருப் சில்மிஷம் செய்ததாக  நடிகை ஸ்வேதாமேனன் புகார் செய்தார்.இதன்பேரில் எம்.பி. பீதாம்பர குருப் மீது இபிகோ 354 மற்றும் போலீஸ் சட்டம் 119 ஆகிய பிரிவுகளின் கீழ் கொல்லம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்வேதாமேனன் கூறிய இந்த புகார் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.  கொல்லத்தில் ஸ்வேதாமேனனை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் பீதாம்பர குருப் எம்பி மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ஸ்வேதாமேனன் இ.மெயில் மூலம் கொல்லம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதில், நடந்த சம்பவம் குறித்து பீதாம்பர குருப் எம்.பி. என்னிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். என வே அவர் மீதான புகாரை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த திடீர் பல்டிக்கு காங்கிரசாரின் மிரட்டலே காரணம் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கொல்லத்தில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நடிகை ஸ்வேதாமேனன் பல வருடங்களுக்கு முன்பே காமசூத்ரா ஆணுறை விளம்பர படத்தில் நடித்தவர். மேலும் தனது பிரசவ காட்சியை கூட சினிமாவுக்காக படம் பிடிக்க அனுமதித்தார். உலகத்தில் வேறு எந்த பெண்ணும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது கிடையாது. சிலரின் தூண்டுதலின் பேரிலும், பணத்திற்காகவும் ஸ்வேதாமேனன் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். ஆனல் பீதாம்பர குருப்பிடமிருந்து பணம் எதுவும் கிடைக்காது“ என்றனர்.

இந்நிலையில் பீதாம்பர குருப் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “என் மீதான புகாரை ஸ்வேதாமேனன் வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவரிடம் எந்த சில்மிஷத்திலும் ஈடுபடவும் இல்லை. அதற்காக நான் மன்னிப்பும் கேட்கவில்லை. அன்றைய நிகழ்ச்சியில் அவரிடம் வேறு யாராவது சில்மிஷம் செய்திருந்தால் அதற்கு பொறுப்பேற்று தான் நான் மன்னிப்பு கேட்பதாக கூறினேன்“ என்றார்.

இதற்கிடையே ஸ்வேதாமேனனிடம் மீண்டும் விசாரணை நடத்த கொல்லம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  புகாரை வாபஸ் பெறுவது குறித்து அவரிடமிருந்து நேரடியாக கடிதம் பெறவும் முடிவு செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது விளக்கத்தை பதிவு செய்யவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top