27 November 2013

இடிந்தகரையில் குண்டு வெடித்து 5 பேர் பலி : வீடுகள் தரைமட்டம் போலீஸ் குவிப்பு

இடிந்தகரையில் குண்டு வெடித்து 5 பேர் பலி
வீடுகள் தரைமட்டம் போலீஸ் குவிப்பு



நெல்லை: 

        நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப¢பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இதில் பயத்தில் உறைந்து போன மக்களில் சிலர் குடும்பங்களுடன் கூத்தங்குழியை விட்டு வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம், பெரியதாழை ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

கூத்தங்குழியை விட்டு வெளியேறிய சிலர் இடிந்தகரை சுனாமி காலனியில் வசித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி கூடி தங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். கடந்த வாரம் இடிந்தகரையில் தங்கி இருப்பவர்கள் வெளியேறுமாறு தண்டோரா போடப்பட்டது. எனினும் சொந்த ஊருக்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என கருதிய சிலர் சுனாமி காலனியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இடிந்தகரை சுனாமி காலனியில் நேற்று இரவு 7 மணிக்கு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்த போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் கூத்தங்குழியைச் சேர்ந்த வியாகப்பன் (35) சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த கூத்தங்குழியை சேர்ந்த சகாயம் மகள்கள் சுசிதா (14), சோனா (12), 2 வயது மகன் ஆகிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு பெண்ணும் பலியானார். ஆனால் அவர் யார் என உடனடியாக அடையாளம் தெரியவில்லை.



இந்த சம்பவத்தில் இடிந்தகரை சுனாமி காலனியை சேர்ந்த சகாயம் மனைவி ரோஸி (38), சந்திய மிக்கேல் மகன் பாலிடெக்னிக் மாணவர் விஜய் (16), சேசு மரிய சூசை (45) உட்பட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் அருகில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடி விபத்திலும், கட்டிட இடிபாடுகளிலும் பலர் காயமடைந்தனர்.

இடிந்த வீடுகளிலும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தால் யாரும் உடனடியாக அருகில் செல்லவில்லை. இதனால் மீட்புப் பணிகள் தாமதமானது. இதனால் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்க முடியவவில்லை. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். வள்ளியூர், திசையன்விளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் என்பதால் மீட்புப் பணி நெடு நேரம் நீடித்தது. நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதரி, தூத்துக்குடி எஸ்பி துரை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்றிரவு இடிந்தகரை, கூத்தங்குளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விடிய விடிய வெடிகுண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருக் கும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வெடிகுண்டு வெடித்து 5 பேர் பலியான சம்பவத்தால இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top