7 October 2013

சென்னை வரும் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டினோம்

சென்னை வரும் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டினோம்


சென்னை :
                         தீவிரவாதி பக்ருதீனிடம் நடத்திய விசாரணையில், நரேந்திர மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.  
மதுரையில் 2011ம் ஆண்டு அத்வானி ரதயாத்திரை செல்லும்போது குண்டு வெடிப்பு, வேலூரில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் வெள்ளையப்பன் கொலை, சேலத்தில் பாஜ மாநில பொது செய லாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை என தமிழகத்தில் இந்து பிரமுகர்களை குறிவைத்து தாக்கும் சம்பவம் தொடர்ந்தது.

இதை தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். இந்து தலைவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. தமிழக டிஜிபி ராமானுஜம் உத்தரவுப்படி, கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி, ஏடிஜிபி நரேந்திரபால் சிங், ஐஜி மகேஷ்குமார் அகர்வால், எஸ்பி அன்பு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதோடு, உளவு பிரிவு ஐஜி கண்ணப்பன், எஸ்பி அருளரசு ஆகியோர் கொண்ட தனிப்படையும் களமிறங்கியது. இவர்கள் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தினர். போலீசாரின் வேட்டையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் சிக்கினார். அவரை தனி அறை யில் அடைத்து வைத்து, ரகசிய விசாரணை நடத்தினர். அதில், தன்னோடு சேர்ந்த மேலும் சில தீவிரவாதிகள் தமிழக, ஆந்திர எல்லையான புத்தூரில் தங்கி இருப்பதாக தகவல் களை கக்கினான்.

இதை தொடர்ந்து, போலீசார் புத்தூர் விரைந்து தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். 10 மணி நேர வேட்டைக்கு பிறகு, தீவிரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூட்டாளியான அபுபக்கர் சித்திக் மாயமானார். பிலால் மனைவி அகினா பானு, மகன் அலிசா (4), மகள் பாத்திமா(3), மகன் யாசில் ஆகியோர்  போலீஸ் வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி பக்ருதீனை போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல்வேறு கொலை வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதால், 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் போது தீவிரவாதிகளுக்கும், பக்ருதீனுக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும். பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இது உதவும். எனவே, 13 நாட்கள் போலீஸ் காவலில் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து தீவிரவாதி பக்ருதீன் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் காவலில் தீவிரவாதி பக்ருதீன் அளித்த வாக்குமூலம் பற்றி போலீ சார் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து தலைவர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த நாங்கள் முடிவு செய்தோம். அதன் படி, பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு ரதயாத்திரை வருவதை அறிந்தோம். தொடர்ந்து, அவரை தீர்த்துக் கட்ட மதுரை திருமங்கலம் பாலத்தின் அடியில் குண்டு வைத்தோம். ஆனால், இதை மோப்பம் பிடித்த போலீசார் பைப் குண்டை அகற்றி விட்டனர்.

இதைத் தொடர்ந்து கீழ்மட்டத்தில் உள்ள இந்து தலைவர்களை கொலை செய்ய முடிவு செய்தோம். பிரபலம் இல்லாமல் இருந்தாலும், வளர்ந்து கொண்டு இருந்த ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், தென்காசியில் குமார பாண்டியன் ஆகியோரை தீர்த்துக் கட்டினோம். இன்னும் சில இந்து தலைவர்களை குறி வைத்து தாக்கினோம்.

குறிப்பாக அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் வீடு திரும்பும் வேளையில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பலரது பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் எங்களை பிடிக்க வலை விரித்தனர். தென் மாவட்டங்களான நெல்லை, வட மாவட்டமான சென்னை, மேற்கு மாவட்டமான கோயம்புத்தூர் ஆகியவற்றில் தனிப்படையினர் எங்களை தேட ஆரம்பித்தனர். எனவே தமிழக, ஆந்திர எல்லையான புத்தூருக்கு இருப்பிடத்தை மாற்றினோம்.

அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கினோம். வீட்டு உரிமையாளர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக வேறொரு வீட்டுக்கு குடியேறினோம். சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் வீட்டில்தான் 6 மாதத்திற்கு முன்பு வாடகைக்கு இருந்தோம். அப்போது, பகலில், இரும்பு வியாபாரம் செய்வோம். இரவில் சதித்திட்டம் தீட்டுவோம்.

ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் ஆகியோரை கொல்ல இங்கு தான் திட்டம் தீட்டப்பட்டது. மேலும், தற்போது திருப்பதியில் நடக்க உள்ள பிரமோற்சவத்திலும், சென்னையில் இருந்து  வரும் கொடை ஊர்வலத்தையும் தடுக்கும் வகையில் நாங்கள் ஈடுபட்டு இருந்தோம்.

மேலும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம். இந்த நிலையில், போலீசார் எங்களை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தி பிடித்து விட்டனர். எங்களை கைது செய்யாமல் இருந்தால், மேலும், சில அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றி இருப்போம். இவ்வாறு தீவிரவாதி பக்ருதீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மிஸ்டு கால் சிக்னல்

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. போன் பேசினால் டவர் சிக்னல் மூலம் போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, மிஸ்டு கால் யுக்தியை கையாண்டோம். அதன்படி, ஒரு திட்டத்தை தொடங்க வேண்டுமென்றால் ஒரு மிஸ்டு காலும், அதை முடித்துவிடு என்றால் 2 மிஸ்டு கால் என ஒவ்வொரு செயலுக்கும் மிஸ்டுகால் எண்ணிக்கையை கொண்டே எங்களின் திட்டத்தை செயல்படுத்தினோம் என தீவிரவாதி பக்ருதீன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

தீவிரவாதி பக்ருதீன் திருட்டு செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட செல்போனுக்கு பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பல தீவிரவாதிகள் மிஸ்டு கால் கொடுத்துள்ளனர். எனவே, பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, பெங்களூர் போலீசாரும் பக்ருதீனை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பட்டியலில் யார், யார்?

போலீசார் வேட்டையில் தீவிரவாதி பக்ருதீன் வைத்திருந்த டைரி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாஜ முக்கிய பிரமுகர்கள் 2 பேர், இந்து முன்னணி முக்கிய நிர்வாகி, விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த 2 பேர், ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவர், இந்து மக்கள் கட்சி முக்கிய பிரமுகர் பெயர்களும் இருந்துள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top