1 October 2013

சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு


பெய்ஜிங், அக். 1:

சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் வயலில் 2 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அந்த வயலில் ஏற்கனவே ஆழ்துளை குழாய் கிணறு தோண்டப்பட்டு இருந்தது.

அதில், பயன்பாட்டுக்கு குழாய் இறக்கப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. அதை கவனிக்காத சிறுவன் விளையாடும்போது, ஆழ்குழாய் கிணற்று குழிக்குள் விழுந்துவிட்டான்.

அவனது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர். செய்வது அறியாது திகைத்த அவர்கள் ஆழ்குழாய் கிணற்றுக்குள் மிக நீளமான கயிற்றை இறக்கி அதை பிடித்து கொள்ளும்படி சிறுவனுக்கு அறிவுறுத்தினர்.

இதற்கிடையே தீயணைப்புபடை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், டார்ச் விளக்குகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மீட்பு பணிக்கு வந்தனர்.

பின்னர் ஆழ்குழாய்க்குள் சிறுவன் சிக்கியிருக்கும் இடத்தையும், அவனின் நிலைமையை அறியவும் முடிவு செய்தனர். அதற்காக நீளமாக கயிற்றில் அதிநவீன ஆப்பிள் ஐபோன் செல்போனில் காமிராவை ஆன் செய்து உள்ளே இறக்கினர்.

ஆழ்குழாய்க்குள் சிறுவன் மூச்சு திணறாமல் இருக்க ஆக்சிஜன் சிலிண்டரும், இருட்டில் பயப்படாமல் இருக்க டார்ச் விளக்குகளும் அடிக்கப்பட்டன. இதற்கிடையே செல்போன் காமிரா மூலம் பார்த்தபோது அவன் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து குதிரைக்கு இடப்படும் சேணம் போன்று அமைத்து அதை சிறுவன் சிக்கியிருந்த தூரம் வரை பலமான கயிற்று மூலம் இறக்கினர். அதன் மூலம் சிறுவனை உயிருடன் பத்திரமாக வெளியே தூக்கி மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடலில் லேசான சீராய்ப்பு காயங்கள் இருந்தன. உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து கிகிச்சை அளித்தனர். அங்கு அவனது நிலைமை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top