பேய் படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய்
தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி வரும் சுந்தர்.சிக்கு இந்த பார்முலா போரடித்துவிட்டதாம். காதல், காமெடி, சென்டிமெண்ட் இதிலிருந்து விலகி வேறுமாதிரியான படங்களை எடுக்கலாம் என முடிவெடுத்தவர், தற்போது பேய் படங்களுக்கு என்று தனி ரசனை இருப்பதால் அடுத்து ஒரு பேய் படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘சந்திரமுகி’ படத்தைப் போன்று பேய் வசிக்கும் அரண்மனையில் நடக்கும் திகீர் சம்பவங்களை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘அரண்மனை’ என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் இவரே நாயகனாகவும் நடிக்க உள்ளார். இன்னொரு நாயகனாக வினய் நடிக்கிறார்.
மேலும், ஹன்சிகா மொத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று அழகான ராட்சசிகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
0 comments