அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி
புதுடெல்லி, செப். 14:
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முடிசூட்டப்பட்ட நரேந்திரமோடி, ஆட்சி மன்ற குழு கூட்டம் முடிந்ததும், மூத்த தலைவர் அத்வானி வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றார். நரேந்திர மோடியும், அவருடன் சென்ற பா.ஜனதா மூத்த தலைவர்களும் 30 நிமிடங்கள் அத்வானி வீட்டில் இருந்தனர். பின்னர் நரேந்திரமோடி, வாஜ்பாயை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானிக்கு ஆதரவாக இருந்த மற்ற இரு மூத்த தலைவர்களான சுஷ்மாசுவராஜ், முரளிமனோகர் ஜோஷி ஆகிய இருவரும் பின்னர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டு ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நரேந்திரமோடி சுஷ்மா மற்றும் ஜோஷி ஆகியோரின் காலை தொட்டு வணங்கி தனது நன்றியையும், பணிவையும் வெளிப்படுத்தினார். முன்னதாக ஆட்சி மன்ற குழு கூடிய பா.ஜனதா தலைமை அலுவலகம் நேற்று விழாக்கோலம் பூண்டு இருந்தது. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை வரவேற்று பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
0 comments