22 August 2013

சிரியாவில் பயங்கரம்: ரசாயன குண்டுவீச்சில் 650க்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் பயங்கரம் 
ரசாயன குண்டுவீச்சில் 650க்கும் மேற்பட்டோர் பலி




டமாஸ்கஸ் : 

             சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய ரசாயன குண்டுவீச்சில் 650க்கும் மேற்பட்டோர் பலியாயினர். சிரியாவில் குர்திஷ் இன மக்களுக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி விட்டது. போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் சிரியாவின் எல்லைப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குர்திஷ் இன மக்கள், புகலிடம் தேடி ஈராக்கின் குர்திஷ்தான் பகுதிக்கு அகதிகளாக வருகின்றனர்.

சிரியாவில் கடந்த 2011ல் இருந்து அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 2 லட்சம் பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்து பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் பெரிய அளவில் வெடித்ததை தொடர்ந்து, சுமார் 10,000 பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்துள்ளனர். சிரியாவில் மோதல் நடப்பது வழக்கமாக உள்ள நிலையில், இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென அங்கிருந்து அதிகம் பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதற்கிடையே, சிரியாவில் அரசுக்கு எதிரான தீவிரவாதிகள் மீது ரசாயன ஆயுதங்களை அரசு தரப்பு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ராணுவத்தினர் ரசாயன குண்டு வீச்சில் விஷக்காற்றை சுவாசித்து 650க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டி இந்த பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்று சிரியா தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் கண்டனம்: 

                   சிரியாவில் இருந்து வந்துள்ள தகவல்கள் உண்மை என்றால் அது மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹாக் கூறியுள்ளார். 

எதற்காக மோதல்: டமாஸ்கசின் தென்மேற்கு பகுதியில் மதாமியாத் எல்,ஷாம் என்ற பகுதியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவே ராணுவம் கடந்த 29 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்னும் கைப்பற்ற முடியாததால் உச்சகட்டமாக இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top