முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மறுமணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷனாரியா தாம்சனை கைபிடிக்கிறார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் டெஸ்டில் 414 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.
வாசிம்அக்ரமின் மனைவி ஹூமா 2009–ம் ஆண்டு மரணம் அடைந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 25–ந்தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
மனைவியை இழந்த பிறகு வாசிம்அக்ரம் நடிகை சுஷ்மிதாசென்னுடன் நெருக்கமாக இருந்தார். அவரை திருமணம் செய்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்து இருந்தனர்.
வாசிம் அக்ரம் மறுமணம்:
இந்த நிலையில் 47 வயதான வாசிம் அக்ரம் மறுமணம் செய்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷனாரியா தாம்சனை அவர் திருமணம் செய்கிறார்.
வாசிம் அக்ரம்– ஷனாரியா தாம்சன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை தாம்சனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கிறது.
வாசிம்
அக்ரம் ஷனாரியா தாம்சனை 2011–ம் ஆண்டு மெல்போர்னில் முதல் முறையாக
சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஷனாரியா தாம்சன்
இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவர் பாகிஸ்தானில்
குடியேறுகிறார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும்போது, நான்
மீண்டும் திருமணம் செய்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. நான்
அதிர்ஷ்டக்காரன் தான் மீண்டும் காதல் உருவானது மிகுந்த மகிழ்ச்சி தான்
என்றார்.
வாசிம் அக்ரமுக்கு முதல் மனைவி ஹூமா மூலம் 15 வயதில் தைடூர் மகளும், 12 வயதில் அக்பர் என்ற மகனும் உள்ளனர். இருவரும் கராச்சியில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.













0 comments