பிரெஞ்சு ஓபன்: ஷரபோவாவை வீழ்த்தி செரீனா சாம்பியன்
பாரிஸ், ஜூன் 8:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் மரிய ஷரபோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இதுவரை செரீனாவும், ஷரபோவாவும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 14 முறை செரீனா வெற்றி பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஷரபோவாவிடம் ஒருமுறை கூட அவர் தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments