18 May 2013

வீட்டிலேயே எளிதில் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

வீட்டிலேயே எளிதில் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்
                        
                               உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை. சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும்.

ஏனெனில் இன்றைய அவசர காலத்தில், எதையும் விரைவில் முடிக்க வேண்டும் என்று வேகமாக செய்வோம். அதனால் உடல் விரைவில் சோர்வடைந்து, தூக்கம் மட்டுமே அதிகம் வரும். மேலும் அலுவலக வேலையைத் தவிர, வேறு ஏதாவது வேலை சொன்னால், செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் எங்கு உடல் எடையைக் குறைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி நன்மையைத் தரும்?

ஆகவே அத்தகையவர்களுக்காக உடல் எடையை எளிதில் அன்றாட செயல்களின் மூலம் எப்படி குறைப்பது என்று எளிமையான சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அத்தகைய வழிகளுக்கு கஷ்டப்பட்டு எந்த ஒரு இடத்திற்கோ அல்லது கருவிகளை வாங்கவோ செல்ல வேண்டாம். அந்த அளவில் மிகவும் ஈஸியான வழிகள் தான்.

சரி, இப்போது அந்த எளிமையான வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து தெரிந்து கொண்டு, தொடர்ந்து பின்பற்றி வந்து, அதன் நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்.

வீட்டிலேயே எளிதில் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்....

மாடிப்படிகள்
          அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.

 



உட்கார்ந்து எழுதல்


வீட்டிலோ அல்லது வேறு எங்கோ, கீழே உட்கார்ந்தால் எழும் போது, கைகளை கீழே ஊன்றியோ அல்லது வேறு எங்காவது பிடித்துக் கொண்டோ எழ வேண்டாம். இவ்வாறு எழுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.

படுக்கை உடற்பயிற்சி

தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துக் கொண்டு டி.வி பார்க்கும் போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும்.

புஷ் அப்ஸ்

தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகளை தரையில் பதித்து, உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக மூக்கை தரையில் தொட்டு, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.

ஜாக்கிங்

ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

நடனம்

உடல் எடையைக் குறைக்க சிறந்த வழியென்றால் அது நடனம் தான். ஆகவே வீட்டில் சாதாரணமாக வேலையின்றி இருக்கும் போது, நல்ல குத்துப் பாட்டை போட்டு, நடனம் ஆடலாம்.

குதிக்கும் பயிற்சி

சிறுவயதில் தான் படத்தில் காட்டிய படி குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டிருப்போம். ஆனால் அத்தகைய குதிக்கும் பயிற்சியை செய்தாலும், உடலில் ஆங்காங்கு ஒட்டியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, எடையை குறைக்கும்.

ஸ்கிப்பிங்

இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

தாழ்நிலை பயிற்சி

இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிது. இதற்கு ஒரே ஒரு டேபிள் மட்டும் போதுமானது. இந்த முறையை இரண்டு வகையில் செய்யலாம். ஒன்று படத்தில் காட்டிய படி, டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும்.

தசையை வலுவாக்கும் பயிற்சி

இது பார்ப்பதற்கு புஷ் அப் போன்றது தான். ஆனால் இந்த முறையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகளையும், கால்விரல்களையும் தரையில் ஊன்றி, உடலை மேலே தூக்கிக் கொண்டு, முடிந்த வரையில் இந்த நிலையில் இருக்க வேண்டும். இதனால் தசைகள் நன்கு வலுப்பெறும்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top