ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 1
(முக்கிய சம்பவங்கள்)
படுகொலை தொடங்கி இன்றளவும் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:

கோபத்தினால் உந்தப்பட்ட ஒரு இளைஞனின் கொலை முயற்சி, தோல்வியில் முடிவடைகின்றது. ராஜீவ்காந்தி உயிர் தப்புகின்றார்.ஆனால், இதன் பின் நான்கரை வருடம் கழித்து, நடத்தப்பட்ட மற்றுமொரு கொலை முயற்சி, எந்த வகையான தவறுக்கும் இடம்கொடுக்காமல் நடந்து முடிந்தது. காரணம், அக்கொலையின் சிக்கலான, அதேவேளையில், தெளிவான திட்டத்தை முன்வைத்த, உலக தரம்வாய்ந்த வலைபின்னலே.
1989 ஆம் ஆண்டு உலக அரசியலில் வேகமான பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவரின் வீழ்ச்சி, உலகின் முதல் சோசியலிச நாடான, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு தொடக்க புள்ளியாக அமைகின்றது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இருபெரும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வரும் தருவாயை நெருங்குகின்றது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி உலக நாடுகளிடையே புதிய அரசியல் அணிச்சேர்க்கையை கோரியது. உலகின் இந்த குழப்பமான அரசியல் சூழல் இந்தியாவிலும் எதிரொலித்தது. ராஜீவ் பிரதமர் பதவியை இழக்கின்றார்.அடுத்த இரண்டே ஆண்டுகளில் இரண்டு பிரதமர்கள் ஆட்சிக்கு வருகின்றனர்.
1991 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படுகின்றது.தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ராஜீவ் கலந்துகொள்கின்றார். வடஇந்தியாவில் தேர்தல் முடிவுற்ற நிலையில், தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
0 comments