28 May 2013

ஜூன் 10-ல் தான்!: கோடை வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு

ஜூன் 10-ல் தான்!: கோடை வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு 



சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top