பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ஜெய்பூர், மே 18:
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது.
இங்கு தங்கி படித்து வரும் 15-17 வயதுக்குட்பட்ட பேச்சு மற்றும் கேட்புத் திறனற்ற மாணவிகளை கனோட்டா பகுதியில் அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 'அவாஸ் பவுண்டேஷன்' பேச்சுத்திறன் பள்ளிக்கு அனாதை இல்ல நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.
பயிற்சி முடிந்து காந்தி நகர் ஆசிரமத்துக்கு திரும்பிய 5 மாணவிகளும் தொடர்ந்து சில நாட்கள் வரை சரியாக சாப்பிடாமல் அழுதபடி இருந்தனர். ஆசிரம நிர்வாகிகள் அம்மாணவிகளிடம் விசாரித்தபோது தங்களுக்கு நேர்ந்த கொடுமையை அவர்கள் சைகையால் தெரிவித்தனர்.
பயிற்சி பள்ளி நிர்வாகிகள் தங்களை அடித்து, உதைத்து, மிரட்டி, கற்பழித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆசிரம நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவாஸ் பவுண்டேஷன் இயக்குனர் அல்பனா சர்மா, ஊழியர்கள் சுரேஷ், அசோக், கீதா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேaலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்
0 comments