நடிகைகளை சப்ளை செய்த குருநாத்
சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பற்றி பல தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதில் அவர் நடிகைகளை வீரர்களுக்கு அறிமுகம் செய்த கதைகள்தான் கூடுதல் கவனத்தை கவர்ந்திருக்கிறது. சென்னை கேப்டன் தோனியை குஷிபடுத்த முதலில் டுகாட்டி என்கிற சொகுசு பைக் வாங்கிக்கொடுத்தார்.
தனிமையில் சென்னை முழுக்க டுகாட்டியில் சுற்றிக்கொண்டிருந்த கேப்டன் தோனியை பார்த்து மனம் நொந்து போய்.. அடுத்த நாள் இரவு பார்ட்டியில் லட்சுமி ராய் என்கிற நடிகையை அறிமுப்படுத்தி வைத்தார் குருநாத்.
அடுத்த நாளிலிருந்து தோனி தன் பைக்கில் லட்சுமிராயை ஏற்றிக்கொண்டு சென்னையை வலம்வந்தார். அதை கண்டு சீனுமாமாவின் மருமகன் குருநாத் ஆனந்தகண்ணீர் வடித்தார். சீனுமாமாவின் மருமகன் குருநாத் இப்படி தனிமையில் வாடுகிற கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல துணைகளை அறிமுகப்படுத்திவைப்பதில் கில்லாடியாம்.
அப்படிதான் சென்னை நகரம் உறங்கும்போது தனிமையில் புலம்பிய சுரேஷ் ரெய்னாவுக்கு நடிகை ஸ்ருதிஹாசனை அறிமுகம் செய்துவைத்தாராம். அதற்கு பிறகு ரெய்னா தினமும் செஞ்சுரியாக விளாசித்தள்ளினார் என்கிறது சென்ற வார ஐபிஎல் வரலாறு. ஐபிஎல் துவங்கிய புதிதில் நடிகை நயன்தாராதான் இப்போட்டிகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரை உள்ளே அழைத்துவந்து அம்பாசிட்டராக்கியதே குருநாத்தானாம்.
ஆனால் நயன்தாராவுடன் ஏதோ இரவு பார்ட்டி டீலிங் மேட்டரில் லடாய் ஆகிவிட.. அவர் கழட்டிவிடப்பட்டார். இப்படி நம்முடைய சென்னை அணியை வெற்றிபெற தீயாக வேலை பார்த்த சீனுமாமாவின் மருமகனும் அடுத்த வாரிசுமான குருநாத் அவர்கள் மீதுதான் இப்போது சூதாட்டகாரர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என அபாண்டமான குற்றசாட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வேளையில் நம்மால் முடிந்தது அவருக்காக சோகமாக விசில் அடிப்பதுதான்.. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சோக விசில் அடிங்க..
0 comments