இராமேசுவரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க இலங்கை எம்.பி.க்கு தடை
இராமேசுவரம்:
இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்திருந்தார்.
அதன்படி நேற்று இராமேசுவரம் விவேகானந்தர் மடம் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கலந்து கொள்வதற்காக சீனித் தம்பி யோகேஸ்வரன் வந்தார்.
ஊர்வலம் தொடங்கும் போது அதில் பங்கேற்க வந்த சீனித்தம்பி யோகேஸ்வரனை இராமேசுவரம் டி.எஸ்.பி. மோகன்ராஜ், ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கு மறுத்து விட்டார்.
இதனை தொடர்ந்து அவர் இராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கு வெளியில் நின்றிருந்த பாதுகாப்பு போலீசார் முதலில் கோவிலுக்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளிடம் பேசிய பின் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து சீனித்தம்பி யோகேஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், இந்து மக்கள் கட்சியின் அழைப்பை ஏற்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கலந்து கொள்ள இராமேசுவரத்திற்கு வந்தேன். ஆனால் போலீசார் தடை விதித்துவிட்டனர். இது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிப்பேன் என்றார்.













0 comments