பிரபுதேவாவுக்கு மெழுகு சிலை
பிரபுதேவாவுக்கு புனே மியூசியத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டது. வெளிநாடுகளில் புகழ்பெற்ற விஐபிகளுக்கு மெழுகு சிலை நிறுவுவது வழக்கம்.
அதுபோல் இந்தியாவில் புனே பகுதியில் உள்ள லேனாவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைத்து பராமரிக்கப்படுகிறது. ஏற்கனவே கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது டான்சரும் இயக்குனருமான பிரபு தேவாவுக்கும் மெழுகு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையை நேற்று பிரபு தேவாவே திறந்து வைத்தார்.
இது பற்றி பிரபுதேவா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, என் வாழ்வில் இதுவொரு முக்கியமான நாள். இப்போது எனது மெழுகு சிலையை திறந்தேன். சுனில் குழுவினர் அமைத்திருக்கும் இச்சிலை என் மனதை கவர்ந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments