17 May 2013

விரைவில் ‘ஜெராக்ஸ் மனிதர்கள்’ ...

விரைவில்  ‘ஜெராக்ஸ் மனிதர்கள்’
உருவாகப் போகிறார்கள்


வாஷிங்டன்: தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகளின் குளோனிங் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. அதாவது, நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் இருந்து செல் பகுதிகளை எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதனால் உருவாகும் ஸ்டெம் செல்லைக் கொண்டு உடலின் எந்த பாகத்தையும் உருவாக்க முடியுமாம். வியாதி கண்டவருக்கு எளிதில் சிகிச்சை அளிக்கவும், வியாதிக்கான மருந்து கொடுப்பது எளிதாக அமைவதும் மற்றும் நோயை கண்டறியவும் இந்த முறை பயன்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி.

ஸ்டெம் செல் உருவாக்கம்...

அமெரிக்காவின் ஆரிகான் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் இருந்து செல் பகுதிகளை எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.


தோலோடு சினை முட்டை...

மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.


குளோனிங்னா என்ன?
7/****//மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்'.

 
 
 
 
 தவளை... மீன்... சுண்டெலி
 
 
 இந்த ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகிறது. 1952-ல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. 1963-ல் மீன், 1986-ல் சுண்டெலி.. என்று பட்டியல் நீள்கிறது.


 
 
 
டோலி... டோலி... டாலி
பெண் செம்மறி ஆட்டின் பால்மடியில் இருந்து செல்லை எடுத்து அதில் இன்னொரு பெண் ஆட்டின் முட்டையை சேர்த்து கருமுட்டையாக மாற்றி இதை வேறொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்து.. என 3 பெண் ஆடுகளின் குட்டியாக 1996-ல் ‘டாலி' ஆடு பிறந்தது குளோனிங் ஆராய்ச்சியில் பெரும் மைல் கல் சாதனை.

15 ஆண்டு முயற்சி வெற்றி...

மனித செல்லையும் குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வந்தது. 15 ஆண்டு தீவிர முயற்சிக்கு பிறகு இதில் தற்போது வெற்றி கண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஆரிகன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.


உறுப்பு மாற்றுக்கு உதவும்...

இதுபற்றி ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் சுக்ரத் மிடாலிபோவ் கூறும்பொழுது, 'மனிதனின் தோல் செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுபோல குளோனிங் முறையில் உருவாக்கப்படும் கருமுட்டையில் இருந்து ஸ்டெம்செல் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வகையான திசு செல்களை உருவாக்க முடியும். உறுப்பு மாற்று ஆபரேஷன்களுக்கு இது முக்கிய பங்களிக்கும். உறுப்பு செல்களை வளர வைத்து, செயற்கை உறுப்புகள் தயாரிப்பது, தேவைப்படுவோருக்கு பொருத்துவதற்கான முயற்சிகளும் வெற்றி பெறும்.


உறுப்புகளை வளர்க்கும் திறன்...


குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மனித ஸ்டெம்செல்லுக்கு வேறு செல்கள், திசுக்கள், உறுப்புகளை வளர வைக்கிற திறன் இருப்பது உறுதியாக தெரிகிறது. பார்வை கோளாறுகள், தண்டுவட பாதிப்புகள், பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கருமுட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் ஜெராக்ஸ் பிரதிகளை உருவாக்க முடியும்.

 
புதிய செல் பொருத்துதல்...

பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு இந்த புதிய செல்களை பொருத்துவதன்மூலம் அவர்களை குணமாக்க முடியும். அதே நேரம், இந்த குளோனிங் ஸ்டெம் செல்லுக்கு இனப்பெருக்க குணம் இருக்கிறதா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. அதில் நாங்கள் ஆர்வமும் காட்டவில்லை' என மிடாலிபோவ் கூறினார்.


மரபணு வளர்ச்சியில் மைல்கல்...

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலை ஸ்டெம்செல் துறை பேராசிரியர் மார்ட்டின் பெரா கூறுகையில், ‘‘ஆரிகன் விஞ்ஞானிகளின் அபார சாதனையானது மரபணு வளர்ச்சியில் மைல்கல் போன்றது. ஸ்டெம்செல்களின் மூலம் பலவித நோய்களை குணப்படுத்த முடியும் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். ஆரோக்கியமான மனிதகுலத்தை உருவாக்கி நாம் சாதனை படைப்பதால், ஸ்டெம்செல் மற்றும் குளோனிங் சம்பந்தமான எதிர்ப்புகள் தானே மறையும்'' என்றார்.


மனித ஜெராக்ஸ் உறுதி...

மனித செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போதைக்கு இல்லாவிட்டாலும், மனிதனின் ஜெராக்ஸ் என்றாவது ஒருநாள் உருவாக்கப்படக்கூடும் என்பது உறுதியாகிவிட்டது..
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top