ஆர்.எஸ்.மங்கலம் கேஸ் கசிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்வு
ஆர்.எஸ்.மங்கலம், மே. 15:
ஆர்.எஸ்.மங்கலத்தில் கேஸ் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பேரூராட்சி முன்னாள் பெண் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்காதர். கடந்த 10-ம் தேதி அதிகாலை கேஸ் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் செய்யது சுகராபீவி (47), மகன் முகமது அர்ஷத், மகள் நூருல் ஜாரியா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் அன்று மாலையே ஷேக் அப்துல் காதரும், அவரது மகள் நூருல் ஜாரியாவும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செய்யது சுகராபீவி சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். காயமடைந்த முகமது அர்ஷத் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகரா பீவி இறந்ததை அடுத்து கேஸ் கசிவு சம்பவத்தில் இருந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

0 comments