திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது

தினந்தோறும் உண்டியல் எண்ணும் போது தங்க நகைகள் தரம் பிரிக்கப்படும். ஒரு மாதத்தில் கிடைக்கும் நகைகள் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் 25-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த வகையில் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 25-ந் தேதி வரை காணிக்கை மூலம் 140 கிலோ தங்க நகைகள் கிடைத்து உள்ளது.
இதற்கு முன்பு ஒரு மாதத்தில் 190 கிலோ தங்க நகை கிடைத்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது 140 கிலோ தங்கம் கிடைத்திருப்பது 2-வது சாதனையாக கருதப்படுகிறது.
0 comments