28 June 2013

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் கேரளா படகு வீடுகளில் விபச்சாரம்! சிக்கிய மாணவிகள்...

ஆடம்பர வாழ்க்கைக்கு  ஆசைப்பட்டு  

பள்ளி, கல்லூரி மாணவிகள் கேரளா படகு வீடுகளில் விபச்சாரம்! 

அரபு நாட்டுப் பயணிகளே அதிகம் 


ஆலப்புழா: 

                கேரள மாநிலத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் அழகான படகு வீடுகளில் கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள படகு வீடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் விருப்பமானது. சுற்றுலா பயணிகள் மூலம் மாநிலத்தின் வருமானமும் அதிகரிக்கிறது. ஆனால் அழகான அந்த படகு வீடுகளில் இருண்ட பக்கங்களும் உள்ளதாக

செக்ஸ் டூரிஸம் 

 மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் முக்கியமான சுற்றுலா ஒரு திடீர் பாய்ச்சலை, அது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உள்ளூர் பெண்கள் பாலியல் சந்திப்புக்களில் அனுபவிக்க பார்த்து சுற்றுலா பயணிகள் சில நேரங்களில் குழந்தைகள் இருவரும் கொண்டு வந்தது. டெக்கான் கிரானிக்கல் இதழ் விசாரணையில் தெரியவந்துள்ளது. படகுவீடுகளை மூலதனமாக வைத்து ஜெஸ்ஸி, ஜீனத், ஸ்நேகா என்ற மூன்று பெண்கள் விபச்சாரத் தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு விபச்சாரத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனராம். இதன்மூலம் பலஏக்கர் நிலங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர்.

ஏஜென்டுகள் மூலம் உளவு 

                           இவர்கள் ஏஜென்டுகளை நியமித்து கல்லூரிப் பெண்களை கவர்ந்து பாலியல் தொழிலுக்கு இழுத்துவிடுகின்றனர். இவர்களின் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது பள்ளி மாணவிகளும் சிக்கியுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணிகள் 

                      இந்த மாணவிகளை அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக்குகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தொல்லை தாங்கலை 

                   அரபு நாட்டுப் பயணியிடம் மூன்று நாட்கள் அனுப்பிவைக்கப்பட்ட 20 வயதான இளம்பெண் அந்த பயணியின் தொல்லை தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள். அந்தப் பெண்ணுக்கு 45,000 ரூபாய் கொடுத்துள்ள நிலையில் ஏஜெண்டுகளின் கைக்கு போனது போக அந்த இளம்பெண்ணுக்கு வெறும் 10,000 ரூபாயை மட்டுமே கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இந்த ஒரு பெண் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறு ஏமாற்றி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நோய்கள் பரப்பும் பயணிகள் 

          வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பயணிகள் மூலம் இந்த இளம் பெண்களுக்கு நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. 50 சதவிகிதம் கமிஷன் கிடைப்பதால் ஏஜென்டுகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆடம்பர வாழ்க்கை 

           பள்ளி, கல்லூரி மாணவிகளில் பலரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த தொழிலில் சிக்குகின்றனர். ஆழப்புலா மாவட்டத்தில் மட்டும் 1860 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 இதில் அதிக அளவில் மாணவிகள்தான் உள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top