நாடாளுமன்ற மேலவை தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
தே.மு.தி.க வுக்கு ஆப்பு
சென்னை :
நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தருவதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நாடாளுமன்ற மேலவை எம்பிக்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய எம்பிக்களை தேர்ந்தெடுக்க நாளை காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில்
அதிமுக சார்பில் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் ஆகிய 4 பேரும்,
திமுக சார்பில் கனிமொழி,
தேமுதிக சார்பில் இளங்கோவன்,
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா
ஆகிய 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
ஒரு வேட்பாளரை 34 எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
6வது வேட்பாளர் யார் வெற்றி பெறுவார் என்பதில்தான் இழுபறி நிலை இருந்தது. திமுகவில் 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். புதிய தமிழகம், மமக ஆகிய கட்சிகளின் தலா 2 உறுப்பினர் களின் ஆதரவையும் சேர்த்தால் 27 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.
அதனால் காங்கிரஸ் யாரை ஆதரிக்கப் போகிறது என்பது அறிவிக்கப்படாமல் இருந்ததால், யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால், நேற்று இரவு திமுக வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது.
இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கையில் கூறியுள்ளார். இதனால் காங்கிரசின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவையும் சேர்த்தால், 32 பேரின் ஆதரவு உள்ளது.
தேமுதிகவில் 29 எம்எல்ஏக்களே உள்ளனர். அவர்களில் அதிமுக ஆதரவு நிலை எடுத்த 7 பேர் தேமுதிகவை ஆதரிப்பரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தேர்தல் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடத்துக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒரு எம்எல்ஏ வாக்களிக்க வரும் போது அவரது பெயர், கட்சி ஆகியவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் பதிவேட்டில் குறிக்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் உள்ள பதிவு நம்பரும் குறித்து கொள்ளப்படும். தேர்தல் அதிகாரி மேஜையில் வைக்கப்பட்டுள்ள வைலட் கலர் ஸ்கெச் பேனாவை எடுத்து சென்று, எம்எல்ஏ தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர் பெயருக்கு முன் உள்ள கட்டத்தில் ‘1’ என்று எழுத வேண்டும்.
பின்னர், அந்த வாக்குச்சீட்டை அந்த எம்எல்ஏ எந்த கட்சியை சார்ந்திருக்கிறாரோ அக்கட்சியின் ஏஜென்டிடம் காண்பிக்க வேண்டும். எம்எல்ஏ யாருக்கு வாக்களிக்க போகிறார் என்பதை கட்சி ஏஜென்ட் குறித்துக் கொள்வார். பின் வாக்குச்சீட்டை மடித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முன் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.
அனைத்து எம்எல்ஏக்களும் விரைவாக வாக்களித்து முடித்து விட்டாலும், மாலை 4 மணிக்குத்தான் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்படும். 5 மணிக்கு வாக்குப்பெட்டியின் சீல் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாளை இரவு 8 மணிக்குள் முடிவுகள் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments