40 அடி பள்ளத்தில் உருண்டு ரயில் தண்டவாளத்தில்
லாரி கவிழ்ந்தது ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு
குன்னூர் :
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கோவைக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தது.
லாரியை ஐயன்கொல்லியை சேர்ந்த டிரைவர் பேபி ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த கிளீனர் ராஜா உடன் வந்தார். ஊட்டி பாலவாசி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சாரல் மழை மற்றும் அதிக பனிமூட்டம் இருந்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து லாரி டிரைவர் பேபி, கிளீனர் ராஜாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் தண்டவாளம் சேதமடைந்ததால் குன்னூர் , ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 7.30 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் மூலம் லாரி அகற்றப்பட்டு, தண்டவாளம் சரி செய்யப்பட்டது.
0 comments