இராமநாதபுரம் மாவட்டத்தில்
ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
வருகிற 30–ந்தேதி கடைசி நாள்
இராமநாதபுரம்:
ஆதிதிராவிட மாணவ –மாணவிகள் கல்லூரி விடுதியில் சேர வருகிற 30–ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.
விடுதி
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ– மாணவிகளுக்கென மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பள்ளி மாணவர்களுக்கு 22 விடுதிகளும், மாணவிகளுக்கு 13 விடுதிகளும் என மொத்தம் 35 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 3 விடுதிகளும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும் என 5 விடுதிகளும் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயி லும் மாணவ–மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார் கள்.
இதேபோல கல்லூரி விடுதி களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ–மாணவிகள் சேர லாம். விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படும் அனைவருக் கும் உணவு, தங்குமிடம் இல வசமாக வழங்கப்படும். 10 மற் றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங் கப்படும்.
30–ந்தேதி
விடுதிகளில் சேர மாணவ–மாணவியரின் பெற்றோர் அல் லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு குறைந்தபட்ச தூரம் பொருந்தாது. தகுதியுடைய மாணவ–மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப் பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள் ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி மாணவ–மாணவிகள் சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிரா விடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரு கிற 30–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் சாதி, வருமான சான்றி தழ்கள் இணைக்கப்பட வேண்டும். எனவே ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ–மாண விகள் அரசின் இந்த சலுகையை பெற்று பயனடையுமாறு கலெக்டர் நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments