யாழ்ப்பாணத்தில் 6400 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சிங்கள ராணுவம்
கொழும்பு, மே.25:
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம்- துறைமுகம் இடைப்பட்ட பகுதியிலுள்ள நிலங்களை ஆக்கிரமித்து அவற்றில் சிங்கள படையினர் முகாம் அமைத்திருந்தனர். இந்த நிலம் முழுவதும் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய பகுதியாகும். 6400 ஏக்கர் நிலம் அவர்களுடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் அவர்கள் இந்த இடத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்று தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போர் முடிவுக்கு வந்த பிறகும் அவர்கள் அந்த இடத்தை விட்டு விலகி செல்லவில்லை. பாதுகாப்புக்காக தொடர்ந்து இந்த பகுதியை நாங்களே வைத்திருப்போம் என்று ராணுவம் கூறுகிறது.
இதனால் நிலத்திற்க்கு சொந்தகாரர்களான தமிழர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் அடக்கு முறைகளை கையாண்டு வருகிறார்கள். நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வற்புறுத்தி தமிழர்கள் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த பிரச்சினையால் யாழ்ப்பாணம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
0 comments