சூதாட்ட பணம் பல கோடி எங்கே?
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியுள்ளது
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியுள்ளது
சென்னை: சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையிலுள்ள தரகர்கள் இந்த பணத்தை டெல்லி மற்றும் மும்பைக்கு அனுப்பியதாக தெரிகிறது. யாருக்கு இந்த பணம் கொடுப்பட்டது என்பது குறித்து விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மும்பை போலீசாரும் சென்னையில் சில இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை சூதாட்ட தரகர்கள் வேதாச்சலம், பஜாஜ் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் கிடைத்துள்ளது.
சூதாட்ட தரகர்களின் தலைவனாக கருதப்படும் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த்தான் இந்த பணம் பரிமாற்றத்திற்கு உதவி செய்ததாகவும் தகவல் கிடைத்தும், பிரசாந்த் மட்டும் கடந்த மாதத்தில் ரூ.350 கோடியை சென்னையில் பல இடங்களில் வசூல் செய்து மும்பை மற்றும் டெல்லியுள்ள நபர்களுக்கு அனுப்பிருப்பதும் தற்போது வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக பிரசாந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்த சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
0 comments