22 May 2013

வருகிற 3-ந்தேதி சூரிய மின்சக்தி பூங்கா பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

வருகிற 3-ந்தேதி சூரிய மின்சக்தி பூங்கா பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் தகவல்

பரமக்குடி:

பரமக்குடி அருகே ரூ. 920 கோடியில் சூரியமின்சக்தி பூங்கா பணிகளை வருகிற 3-ந்தேதி முதல்- அமைச்சர் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் சுந்தர்ராஜ் கூறினார்.

பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்டபட்ட தெய்வேந்திர நல்லூர், குமுக்கோட்டை, செவ்வூர் ஆகிய ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 555 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும்விழா நடந்தது. ஆர்.டி.ஓ. குணாளன் தலைமை தாங்கினார். போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் தெய்வேந்திர நல்லூர் விஜய ராகவன், குமுக்கோட்டை முத்தழகுமுத்து, மாவட்ட செயலாளர் முனியசாமி, ஊராட்சி குழு தலைவர் சுந்தர பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் ரூ. 1 கோடியே 40 லட் சத்து 5 ஆயிரம் மதிப்பில் விலையில்லா பொருட்களை வழங்கி பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.131 கோடியை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். இது வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.

மின்பற்றாக்குறையை போக்க பரமக்குடி தாலுகாவில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய மின்சக்தி பூங்கா ரூ.920 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜூன் மாதம் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

மேலும் மீன்களை பாதுகாப்பாக வைக்க மூக்கையூரில் துறைமுகமும், ரூ. 24 கோடியில் மீன்பதப்படுத்தும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது. மழைநீர் வீணாக கடலில் கலப்பதை கடுக்கவும், அதை தேக்கி வைக்கவும், முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்ல ரூ.23 கோடியில் பரளை ஆறு தூர்வாரப்பட்டுள்ளது.

வறட்சியை தாங்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.424 கோடியில் செயல்படுத்தப் பட்டுள்ளன. தொலைநோக்கு சிந்தனையோடு திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தான். இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்து தொழில் தொடங்க உள்ளன. அதன் மூலம் இந்த மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். மக்களும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு துணை கலெக்டர் திருமால்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிங்க ராசு, வீரகணபதி, அபிராமம் நாகராஜன், இளைஞரணி ஒன்றிய இணைசெயலாளர் ஜெகதீஸ்வரன், அவைத் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top