கோடை உணவு:ட்ரை ஃப்ரூட் மில்க்ஷேக்
என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - 5,
அத்திப்பழம் - 2,
உலர்ந்த திராட்சை - 20,
பாதாம் - 5,
வாழைப்பழம் - 1,
காய்ச்சி ஆற வைத்த பால் - 250 மி.லி.,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பேரீச்சை முதல் பாதாம் வரை எல்லாவற்றையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் வெண்ணெய் மாதிரி அரைக்கவும். பிறகு அத்துடன் வாழைப்பழம், பால் சேர்த்து நன்கு அடித்து, தேன் கலந்து பரிமாறவும்.காலை உணவைத் தவிர்க்கிற குழந்தைகளுக்கு இது மிகச் சரியான மாற்று. இரும்புச் சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லா சத்துகளும் நிரம்பிய முழுமையான உணவு.வாழைக்கு பதில் ஆப்பிள், தேனுக்கு பதில் சுகர்ஃப்ரீ, கொழுப்பு நீக்கிய பால் சேர்த்து, இதையே டயட் செய்கிறவர்களும் குடிக்கலாம்.
0 comments