அம்மை நோய் தாக்காமல் விடுபடும் வழிகள்
சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும். அதனால், பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடையை பிடித்துக் கொண்டோ அல்லது தொப்பி அணிந்தோ செல்ல வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க பருத்தி உடைகளை உடுத்த வேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்ல கூடாது. பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் இருக்கும். அதனால், குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக்கூடும். அதனால், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
0 comments