பார்லரில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?
ஒயின் பெடிக்யூர்:
இதுநாள் வரை ஒயின் ஃபேஷியல்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒயின் பெடிக்யூர் ரொம்பவே லேட்டஸ்ட். ஒயின் மற்றும் கிரேப் சீட் ஆயில் வைத்துச் செய்யப்படுகிற இந்த பெடிக்யூர், கால்களின் சருமத்தை டைட் ஆக்கும். திராட்சையில் உள்ள கிளைகாலிக் அமிலம், இறந்த செல்களை நீக்கும். கிரேப் சீட் ஆயில், பாதங்களுக்கு ஒருவித சூட்டைக் கொடுக்கும். கடைசியாக ஒயின் பேக்கும் போட்டு, இந்த பெடிக்யூரை முடிப்பார்கள். ரொம்ப நேரம் நடந்த களைப்பு நீங்க, தளர்ந்து போன கால்களுக்குப் புத்துணர்வு கொடுக்கவே இந்த பெடிக்யூர்.
கேன்டில் பெடிக்யூர்:
இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிற வாசனையான மெழுகு கொண்டு செய்யப்படுகிற சிகிச்சை இது. அவரவர் சருமத்துக்கும் பிரச்னைக்கும் ஏற்றபடி, விதம் விதமான மெழுகுகள் உள்ளன. அதில் உள்ள திரியைக் கொளுத்தினால், மெழுகு உருக ஆரம்பிக்கும். அது வழக்கமான மெழுகு மாதிரி இல்லாமல், எண்ணெய் போல இருக்கும். அந்த எண்ணெயை வைத்தே பாதங்களில் மசாஜ் செய்வார்கள். இதனால் வறண்ட சருமம் மாறி, வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மாயமாகும்.
ரெஃப்ளெக்சாலஜி:
முதலில் சொன்ன இரண்டும் அழகு சிகிச்சைகள் என்றால், இது ஆரோக்கிய சிகிச்சை. மசாஜ்தான் இதில் பிரதானம். பாதத்தில் முக்கியமான சில அழுத்தப் புள்ளிகள் இருக்கின்றன. அது ஒவ்வொன்றும் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை, கணையம், மூளை என முக்கிய உறுப்புகளுடன் சம்பந்தப் பட்டவை. அந்த அழுத்தப் புள்ளிகளைத் தெரிந்து கொண்டு அந்த இடத்தில் மசாஜ் செய்யும் போது, ரத்த ஓட்டம் சீராகும். உடல் களைப்பு நீங்கி உற்சாகம் பெறும். தூக்கமின்மை, தைராய்டு, சைனஸ், தலைவலி, முதுகுவலி, கை, கால் வலி, மூட்டு வலி, டென்ஷன், மன உளைச்சல் என தலை முதல் கால் வரைக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் ரெஃப்ளெக்சாலஜி தீர்வளிக்கும். பயணக் களைப்பை விரட்டுவதில் இந்த சிகிச்சையை மிஞ்ச வேறில்லை.

0 comments