தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை : "வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. இதனால், வெப்பளவு சற்று குறைந்து காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கடல் காற்று தாமதமாக வீசியதால், நிலக்காற்று சூடாகி அனல் காற்று வீசியது.
அதிகபட்சமாக, 42.8 (109.03பாரன்ஹீட்) செல்சியஸ், திருச்சியில் 41.6 (106.88), பாளையம்கோட்டை, கரூர்பரமத்தியில் தலா 40 (104), மதுரையில் 39.8 (103.63), சேலத்தில் 39.7 (103.46), சென்னை மீனம்பாக்கத்தில் 37.8 (100.03) டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம் மரந்தஹள்ளியில் 7, தர்மபுரி,குன்னூரில் தலா 5 செ.மீ., மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல மாவட்டங்களில் மழை ; தர்மபுரி, ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டங்களில், இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.
காற்றில் பறந்தன :
75,000 வாழை மரங்கள் சேதம் ; மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில், கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதனால், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில், பலத்த காற்று வீசுகிறது. குடிசைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.சிறிய நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. திருப்பூர் ஒன்றியம், தொரவலூர் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில், 40 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

0 comments