History

இராமநாதபுரம்                                              

                     இராமநாதபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது

வரலாறு

                    பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த சமஸ்தானம் ஏர்வாடியை சேர்ந்த ஹஸ்ரத் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷாஹீது என்பவர் ஆண்டார். பின்னர் அவரின் வழியினர் சேதுபதி மன்னருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு இந்த சமஸ்தானத்தை ஆண்டனர். அன்றில் இருந்து, பதினைந்தாம் நூற்றண்டின் முற்பகுதி வரை திருவாடனை, பரமக்குடி, கமுதி, முதுகலத்தூர், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய தாலுக்காக்களை உள்ளடக்கிய தற்போதைய ராமநாதபுரம் மாவட்டதை பாண்டிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.

1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. பதினெட்டாம் முற்பகுதியில், குடும்ப சச்சரவின் காரணமாக தஞ்சாவூர் மன்னரின் உதவியோடு 1730ஆம் ஆண்டில் சேதுபதி வம்சத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னரின் பலவினத்தை பயன்படுத்தி பாளையக்காரர்கள் சுதந்திர மன்னர்கள் ஆனார்கள், இதில் ராமநாதபுர சேதுபதி மன்னரும், சிவகங்கை மன்னரும் முக்கியமானவர்கள். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது.

                            1795இல் பிரித்தானியர்கள் முத்துராமலிங்க சேதுபதியை விழ்த்தி ராமநாதபுர அதிகாரத்தை கைப்பற்றினர். 1801இல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கையின் ஜமீன் ஆக்கப்பட்டார். ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி அதிகாரத்தில் இருந்தனர். 1803இல் சிவகங்கையை சேர்ந்த மருது பாண்டியர்கள் பாஞ்சலம்குருச்சியை சேர்ந்த கட்டபோம்மனுடன் இணைத்து பிரித்தானியர்களுக்கு எதிராக கலகத்தில் இடுபட்டனர். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரி வல்லபா பெரிய உடைய தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். திப்பு சுல்தானின் விழ்ச்சிக்கு பின் பிரித்தானியர்கள் அதிகாரத்தை கைப்பற்றி நவாப்பை சிறையிட்டனர். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.

                         1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.

                                              நகர நிர்வாகம்

ராமநாதபுரம் ஒரு நகராட்சி. மாவட்ட தலைநகரை மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றிய பின் இந்த நகர் வேகமாக வளர ஆரம்பித்தது. ராமேஸ்வரம்-மதுரை மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிய பின் இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிக பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வைகை நதி பெரிய கண்மாயில் நுழைந்து பின் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.பெரிய கண்மாயில் தண்ணீர் விவசாயத்திற்காக சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு பகுதியின் பரப்பளவின் காரணமாக இந்த நீர் கடலை சென்று சேர்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நகரில் மக்களின் தேவைக்காக நிறைய குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

                                                 சுற்றுலா தலங்கள்

இராமநாதபுரம் அரண்மனை


இராமநாதபுரம் அரண்மனை நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கிழவன் சேதுபதி என்னும் மன்னரால் கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபமும் கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.

வழிபாட்டுத் தளங்கள்
ராமநாதபுரத்திற்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் ஆகியவை முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்களாக கருதப்படுகிறது. 

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top